Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2023 18:26:33 Hours

23 வது படைப்பிரிவு தளபதி மின்னேரியா இராணுவத் தள வைத்தியசாலைக்கு விஜயம்

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க அவர்கள் திங்கட்கிழமை (ஜனவரி 23) மின்னேரியா இராணுவத் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார், தனது விஜயத்தின் போது மருத்துவமனை வளாகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விசாரித்தார்.

வருகை தந்த தளபதியை மின்னேரியா இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் கேவிஜி மதுசங்க அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், மருத்துவமனையின் தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் பற்றிய விரிவான விளக்கமளித்ததுடன், மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களை அறிமுகப்படுத்தினார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களிடம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தனது விஜயத்தின் போது தளபதி தனது மதிப்புமிக்க எண்ணங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்களை பதிவிட்டார்.