Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2023 17:20:08 Hours

223 வது காலாட் பிரிகேட் ஒருங்கிணைப்பில் கிரிக்கெட் போட்டி

தம்பலகாமம், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் மத்தியில் சிவில்-இராணுவ உறவுகள், நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்தவும் விளையாட்டுத் திறனை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு 2023 பெப்ரவரி 22 தொடக்கம் 26 வரை 6 வது இலங்கை இராணுவ கவச வாகன படையணி மற்றும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 223 வது காலாட் பிரிகேட் ஆகியவற்றின் ஆதரவுடன் தம்பலகம் பொது விளையாட்டு மைதானத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

கிரிக்கெட் போட்டியில் சிவில் பிரிவில் மொத்தம் 46 அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 26) நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு கிண்ணியா பிஎம்எஸ் அணியும் கிண்ணியா ஹெவன் லெவன் அணியும் தகுதி பெற்றன. பிஎம்எஸ் அணி கிண்ணியா போட்டியின் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், எதிரணியினரான கிண்ணியா ஹெவன் லெவன் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக, அனைத்து அரச/அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் நிறுவனங்களின் தலைவர்களினால் வெற்றிக்கிண்ணங்களுக்கு நிதி அனுசரணை வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ சேவை படையணி இசைக்குழு, டேக்வாண்டோ அணி மற்றும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கலாசார நடனக் குழு மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கலாசார நடனக் குழுவினர் நிகழ்வுக்கு மேலும் அழகு சேர்த்தனர். வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களும், தம்பலகமுவ கோலம் குதிதம் கல்லூரி மாணவர்களும் இந்நிகழ்வை சுமுகமாக நடத்துவதற்கு தமது ஆதரவை வழங்கினர்.

இறுதிப் போட்டிகளில் கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். திருகோணமலை மாவட்ட செயலாளர் திரு.பி.எச்.என் ஜெயவிக்ரம, 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 223 காலாட் பிரிகேட் தளபதி, பிரதேச செயலாளர்கள், பரகும்பா கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, மொரவெவ உதவிப் பொலிஸ் மாஅதிபர், 6 வது இலங்கை கவசப் படையணி மற்றும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஏனைய பிரமுகர்கள் மற்றும் பிரதேசத்தின் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.