Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 20:28:57 Hours

222 வது காலாட் பிரிகேட் படையினரால் சேருவிலவில் 32 குடும்பங்களுக்கு உதவி

22 வது காலாட் படைப்பிரிவின் கல்லாறு 9 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர் 'சஹானா செவன' திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (06 ஒக்டோபர் 2023) விஜயபாகு காலாட் படையணி 32 குடும்பங்களுக்கு சமூகம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

சுவ தரு 2023 திட்டத்தின் கீழ் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், ஸ்ரீ ஜயவர்தனபுர-கங்கொடவில பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் ‘மிதுருகேல’ ஒன்றுகூடல் ஆகியவற்றின் பிரதம அமைப்பாளரான திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்கள் வழங்கிய நிதி உதவியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மாவு, நூடுல்ஸ், மசாலா, தானியங்கள், சீனி போன்றவற்றை உள்ளடக்கிய உலர் உணவுப் பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.எஸ்.எஸ் டயஸ் ஆர்எஸ்பீ ஆகியோர் இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டதுடன், வழிகாட்டல்களும் வழங்கினர்.

நிவாரணப் பொதிகளைப் பெற்ற பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கலந்து கொண்ட மகா சங்கத்தினரின் குழுவிற்கும் படையினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி நிகழ்வை வண்ணமயமாக்கினர்.

22 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி பிரிகேடியர் கே.கே.எஸ் பெரகும் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.எஸ்.எஸ் டயஸ் ஆர்எஸ்பீ, திரு.பிரசாத் லொகுபாலசூரிய, 222 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 9 வது விஜயபாகு காலாட் படையலகின் படையினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.