Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 19:57:36 Hours

22 வது படைப்பிரிவினரால் திருகோணமலையில் மூன்று புதிய வீடுகளுக்கான அடிக்கல்

திருகோணமலை மாவட்டத்தில் 221, 222 மற்றும் 223 காலாட் பிரிகேட் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு மேலும் மூன்று புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் 2024 ஜனவரி 28 மற்றும் 29 ம் திகதிகளில் மத சம்பிரதாயங்களுடன் முன்னெடுக்கப்பட்டன.

சிவில் சமூகம் மற்றும் பிரதேசத்தில் சேவையாற்றும் படையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் மேம்படுத்தும் வகையிலான இத்திட்டத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ ஏ எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் ஒருங்கிணைப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனுசரனையாளர்களினால் மூன்று வீடுகளுக்குமான நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி, 221 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) கஜபா படையணியினரால் 2024 ஜனவரி 28 ஆம் திகதி திருகோணமலை, மகாமாயபுர, காமினி திசாநாயக்க வீதி, இலக்கம் 81/1 இல் வசிக்கும் திருமதி யசோதரா லக்மாலி பெரேராவின் ஆதரவற்ற குடும்பத்திற்கு திரு ரோஹன் குணசேகர அவர்களின் நிதியுதவியில் வீட்டிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

எல்பி/07, தெஹிவத்தை, நீலபொலவில் வசிக்கும் திருமதி மல்லிகா சந்திரலதாவுக்காக அமைக்கப்படும் வீட்டிற்கான அடிக்கல் 2024 ஜனவரி 29 நாட்டப்பட்டது. 222 காலாட் பிரிகேட் மற்றும் 9வது விஜயபாகு படையணியின் படையினரால் நிர்மாணப் பணிகளுக்கான தமது மனிதவளம் வழங்கப்படுவதுடன், திரு. சிந்திக்க அபேரத்ன அவர்கள் திட்டத்தை நிறைவு செய்வதற்கான நிதி உதவியை வழங்கினார்.

இதேவேளை, 223 வது காலாட் பிரிகேட் மற்றும் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் திஸ்ஸபுர, மொல்லிப்பொத்தானையில் வசிக்கும் திரு. எச்ஏசி தினேஷ் குமாரவின் ஆதரவற்ற குடும்பத்திற்கு 2024 ஜனவரி 29 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு வீடு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அனைத்து பின்தங்கிய குடும்பங்களும் அந்தந்த பகுதியின் கிராம உத்தியோகத்தரின் நெருங்கிய ஒத்துழைப்போடு தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு வீட்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ: 1.35 மில்லியன் என்பதோடு 03 மாதங்களுக்குள் நிர்மாண பணிகளை முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.