Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2023 06:13:13 Hours

22 வது காலாட் படை பிரிவினரால் திருகோணமலை மக்களுக்கு 3000 தென்னம் பிள்ளைகள்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினரால் திருகோணமலை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 300 குடும்பங்களை திங்கட்கிழமை (13 நவம்பர்) 2 வது (தொ) கஜபா படையணிக்கு அழைத்து சுமார் 3000 தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சிலாபம் பிளான்டேஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் வழங்கிய அனுசரனையில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏ.கே.பீரிஸ் ஆர்எஸ்பீ ஆகியோரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தந்த கிராம சேவை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, பயனாளிகளின் திறன் மற்றும் தென்னம் பிள்ளைகளை நடுவதற்கான இடத்தை ஆய்வு செய்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 221, 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட் தளபதிகள், 221 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 20 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தென்னம் பிள்ளைகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.