Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2023 20:18:26 Hours

22 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் தரம் 5 மாணவர்களுக்கு கற்றல் உதவி

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் வரிய குடும்பங்களின் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் 18 செப் 2023 அன்று 1555 மாணவர்களிடையே மாதிரி வினாத்தாள்கள் மற்றும் கடந்தகால பரீட்சை வினாத்தாள்களை வழங்கினர்.

பதவிஸ்ரீபுர ஜயந்திவெவ ஆரம்பக் கல்லூரி, சீனிபுர, கந்தளாய் பாடசாலைகள், மதவாச்சி மகாவித்தியாலயம் மற்றும் மொரவெவ வித்தியாலய மாணவர்களிடையே, 221, 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட்களின் ஒருங்கிணைப்பின் மூலம் 20 வது கஜபா படையணி, 5 வது (தொ) இராணுவ பீரங்கி படையணி, 6 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி (ஆர்எப்டி) படையினர் மாதிரி வினாத்தாள்களை (பகுதி 1 மற்றும் 2) குறித்த பாடசாலைகளுக்கு எடுத்துச் சென்றனர்.

221, 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கூறிய அனுசரணையாளர்களின் அனுசரணையுடன் ‘பஹடபஹக்’ (ஐந்துக்கு ஐந்து) என்ற தொனிப்பொருளின் கீழ் இந் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாணவரும் ஐந்து மாதிரி மற்றும் ஐந்து கடந்த வினாத்தாள்களை பெற்றுக்கொண்டனர்.