Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2023 22:18:18 Hours

22 வது காலாட் படைபிரிவின் தளபதியின் கள விஜயம்

22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 221, 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் கட்டளைப் படையலகுகளுக்கு 2023 டிசம்பர் 07, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயம் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் பொறுப்புகள் மற்றும் நிலைநிறுத்தல் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. விஜயத்தின் போது 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, ஒவ்வொரு தலைமையகத்திலும் அந்தந்த தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி தனது உரையின் போது, படையினரின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுக்கத்தை பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.