Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2024 17:34:41 Hours

211 வது காலாட் பிரிகேட்டினரால் புத்தாண்டு கொண்டாட்டம்

211 வது காலாட் பிரிகேட்டில் 19 ஏப்ரல் 2024 அன்று 211 வது காலாட் பிரிகேட் விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப் புத்தாண்டு கொண்டாடத்தில் பிரதேச மக்கள் இராணுவ வீரர்களுடன் கைகோர்த்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.என் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்கள் மங்கல விளக்கேற்றியதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.

பனிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, ரபான் அடித்தல், யானைக்கு கண் வைத்தல், கயிறு இழுத்தல், வினோத உடை, மற்றும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் அன்றைய நிகழ்வை வண்ணமயமாக்கியதுடன் அனைத்தும் பார்வையாளர்களையும் கவர்ந்தன.

நிகழ்வின் முடிவில், 211 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மற்றும் பொது மக்கள் புத்தாண்டின் சம்பிரதாய மற்றும் கலாசார நிகழ்வுகளில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.