24th December 2023 21:06:13 Hours
தேசிய கயிறு இழுத்தல் சங்கம் ஏற்பாடு செய்த 2023 இன் 19 வது தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 16) காலி, சமனல மைதானத்தில் நடைபெற்றது, இப் போட்டியில் ஆண்கள் பெண்கள் என 20 விளையாட்டுக் கழகங்கள் போட்டியிட்டன.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு அணிகள் போட்டியிட்டதுடன், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப்பிற்கு மேலதிகமாக பல பிரிவுகளில் ஆறு சம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டனர்.
62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, தேசிய கயிறு இழுத்தல் சம்மேளனத்தின் தலைவர், இலங்கை இராணுவ தடகள குழுவின் தலைவர், இலங்கை இராணுவ கயிறு இழுத்தல் குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் 15 வது ட்ரோன் படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் வீரர்களை ஊக்குவித்து இந்த வெற்றிக்கு பங்களித்தனர்.
இராணுவ கயிறு இழுத்தல் வீரர்களின் சாதனைகள் பின்வருமாறு:
ஒட்டுமொத்த சாம்பியன்
640 கிலோ (சிரேஷ்ட ஆண்கள்) - சாம்பியன்
560 கிலோ (சிரேஷ்ட பெண்கள்) - சாம்பியன்
23 வயதின் கீழ் பெண்கள் - சாம்பியன்
23 வயதின் கீழ் ஆண்கள் - சாம்பியன்
திறந்த (ஆண்கள்) - சாம்பியன்
திறந்த (பெண்கள்) - சாம்பியன்