Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 18:24:29 Hours

20 வது கஜபா படையணி படையினரால் புல்மோட்டை பொதுமக்களுக்கு கண் சிகிச்சை முகாம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேடின் 20 வது கஜபா படையணி படையினர் தகுதியான பொதுமக்களின் நலனுக்காக 9 டிசம்பர் 2023 அன்று புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடமாடும் கண் மருத்துவம் மற்றும் கண்புரை பரிசோதனை நிகழ்ச்சியை நடத்தியது.

சிகிச்சையின் போது 217 பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெற்றனர். இந்த குழுவில், 56 நபர்கள் கண்புரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதே நேரத்தில் 161 பேர் மூக்கு கண்ணாடிகளுக்காக தங்களை பதிவு செய்தனர். மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர் டாக்டர் சர்வேஸ்வரம், டாக்டர் நிஸ்மா ராசிக் மற்றும் டாக்டர் கஜானா உட்பட 13 பணியாளர்களுடன் இணைந்து மூக்கு கண்ணாடிகளுக்கான செலவிற்கு நிதியுதவி செய்ததுடன் தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்கினர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 221 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இத் திட்டத்தின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.