Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 09:37:37 Hours

2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 64 வது ஆண்டு நிறைவு

2 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 64 வது ஆண்டு நிறைவு நவம்பர் 23 அன்று காலி தலைமையக வளாகத்தில் சிறப்பு நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக, படையினர் சம்போதி முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மதிய விருந்துபசாரத்தினை அளித்ததுடன் படையணியகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு முன்னதாக படையினர் இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம் மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை 'மகா சங்கத்தினருக்கு ‘ஹீல்தனம்’ (காலை உணவு) வழங்கினர்.

ஆண்டு விழா நாளில் இராணுவ மரபுகளுக்கு இணங்க 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் தங்களது கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை வழங்கினர். அதனை தொடர்ந்து 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடன் மதிய விருந்துபசாரத்தில் பங்குபற்றினார்.

ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின் நிறைவாக மாலையில் அனைத்து நிலையினருக்கு இசை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.