Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 19:27:27 Hours

2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் அனைத்து படையினரும் சிரேஷ்ட நடிகராக மாறிய சிப்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு

விருது பெற்ற சிரேஷ்ட நடிகர் திரு. அமரசிறி கலன்சூரிய இன்று (01) காலை காலமானதுடன் அவரது சினிமா வாழ்க்கைக்கு முன்னர் 1963 இல் இராணுவத்தில் இணைந்து இலங்கை இராணுவத்தின் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆகவும் பணியாற்றியுள்ளார்.

சிப்பாயாக மாறிய பிரபல நடிகரான இவர் 1971 ஜேவிபி கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தின் போது இராணுவத்தில் சேவையாற்றியதாக பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

82 வயதில் அவரின் மறைவிற்கு 2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள அனைத்து படையினரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றன.