Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 18:15:13 Hours

17 வது பொறியியல் சேவைகள் படையணியின் 9 வது ஆண்டு நிறைவு

17 வது பொறியியல் சேவைகள் படையணியின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 11 நவம்பர் 2023 அன்று இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் பல மத மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆண்டு நிறைவு நாளில், தியத்தலாவ, மெனிக் கந்த முகாம் வளாகத்தில் 17 வது பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் இஎடிபீ எதிரிசிங்க அவர்களுக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், மரக்கன்று நடல், அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துபசாரம் என்பவற்றில் கலந்துகொண்டார்.

ஆண்டு நிறைவு நாளுக்கு முன், 'பிரித் பாராயணம்', 'தர்ம' பிரசங்கம் மற்றும் சமூகம் சார்ந்த சிரமதானம் உள்ளிட்ட பல மத நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதேபோல்,அப்பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் கோவில் வளாகத்தில் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வும் இட்பெற்றது.

அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் சிவில் உறுப்பினர்கள் பலர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.