Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st July 2023 19:46:21 Hours

17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு படைப் பிரிவின் தளபதி விஜயம்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 17 வது இலேசாயுத காலாட் படையணிக்கு புதன்கிழமை (ஜூலை 12) விஜயம் செய்தார். பம்பைமடு 56 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்திற்கு 17 வது இலேசாயுத காலாட் படையண இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

17 வது இலேசாயுத காலாட் படையணி முன்பு மல்லாவியில் உள்ள 65 வது காலாட் படைப்பிரிவு பகுதியில் சேவையாற்றி வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

படையணிக்கு அவர் வருகை தந்ததைக் குறிக்கும் வகையில், படையணி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை தளபதி நட்டுவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதுடன், படையினருக்கு உரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்எ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.