Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2023 13:10:17 Hours

141 வது காலாட் பிரிகேட் படையினரால் பாதிக்கப்பட்ட வந்துராவ பகுதியில் நிவாரணப்பணி

மீரிகம, வந்துராவ பிரதேசத்தில் 141 வது காலாட் பிரிகேடினரால் நவம்பர் 6 - 7 ஆம் திகதிகளில் காற்று மற்றும் அடைமழை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட 23 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ மற்றும் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்.ஜீ.பி காரியவசம் ஆகியோரின் வழிக்காட்டலுக்கமைய படையினரால் காலநிலை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கூரைகள் சரிசெய்யப்பட்டன.

அதேபோன்று, 141 காலாட் பிரிகேட் படையினரால் விழுந்த மரங்கள், கிளைகள் மற்றும் ஏனைய குப்பைகள் அகற்றி, வாகன போக்குவரத்துக்கான பாதையை சீர் செய்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தகரம் மற்றும் கூடாரங்களைப் பயன்படுத்தி கூரைகளை மூடி, சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுத்ததுடன், சில குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உதவினர்.

141 வது காலாட் பிரிகேட்டின் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளின் அதிகாரிகள் உட்பட 60 இற்கும் மேற்பட்ட படையினர் இந்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.