Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2024 15:16:42 Hours

14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவினால் லெபனான் பெய்ரூட்டில் 76 வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட்டம்

இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு லெபனான் பெய்ரூட் போகோசியன் திரையரங்கில் 2024 பெப்ரவரி 04 ஆம் திகதி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சியில் லெபனானுக்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதுவர் திரு. கபில சுசந்த ஜயவீர அவர்களின் அழைப்பின் பேரில் , ஐ.நா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி, மேஜர் ஈஎம்எச்சி டி சாரம், மேஜர் எஸ்எம்என்எம் மானகே, மேஜர் ஆர்எம்பீடபிள்யூபி இலுக்கும்புர ஆகியோர் 14 வது இலங்கைப் பாதுகாப்பு குழுவின் கலாசார குழுவினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

லெபனானில் உள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கைத் தூதுவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதிமேதகு தூதுவர் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் இலங்கை ஜனாதிபதியின் சுதந்திர தினம் செய்தி வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமானது.

அடுத்து, ஐ.நா லெபனான் 14 வது இலங்கை பாதுகாப்பு குழுவின் வண்ணமயமான நடனங்கள் மற்றும் கலிப்சோ இசைக்குழு நிகழ்ச்சிகள் அடங்கிய கலாசார நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதேவேளை, லெபனானில் ஆற்றிய அமைதி காக்கும் கடமைகளை பாராட்டி ஐநா லெபனான் 14 வது இலங்கை பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரிக்கு தூதுவரினால் சிறப்பு சின்னம் வழங்கப்பட்டது.

சிரியாவிற்கான இலங்கையின் தூதுவர், ஐ.நா லெபனான் 14 வது இலங்கை பாதுகாப்பு குழுவின் கட்டளை தளபதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தின் உயரதிகாரிகள், லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் லெபனான் பிரஜைகள் அடங்கிய பலர் இந்த வண்ணமயமான நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.