Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2024 16:16:05 Hours

12 வது காலாட் படைப்பிரிவினரால் வெல்லவாயவில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம்

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படைப்பிரிவின் படையினரால் 2024 மார்ச் 15 ஆம் திகதி வெல்லவாய யவ்வனகுமாரபுர ஆரம்ப பாடசாலையின் 54 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். இலங்கையின் அபினிட்டி அறக்கட்டளையின் பணிப்பாளர்களான திரு.தினேஷ் கதியாராச்சி மற்றும் திரு.மைக்கல் டேவிட் ஆகியோர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை வழங்கினர்.

இந்நிகழ்வில், வெல்லவாய பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர், 122 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.