Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2023 20:35:14 Hours

12 வது காலாட் படைபிரிவின் 12வது ஆண்டு விழா

12 வது காலாட் படைபிரிவின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமூக சேவைகள், விளையாட்டு நிகழ்வுகள், சமய நிகழ்வுகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்கள் போன்றவை 2023 மார்ச் 27 தொடக்கம் ஏப்ரல் 08 வரை அம்பாந்தோட்டை நகரவெவ 12 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் இடம் பெற்றன.

12 வது காலாட் படைபிரிவு தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் ஏற்பாடுகளும் ‘சிரமதான பணிகளுடன் ஆரம்பித்தன. இதற்கமைய கட்டுவெவ சந்தியிலிருந்து முகாம் வரையிலான பாதையின் இரு ஓரங்களும் 27 மார்ச் 2023 அன்று சுத்தம் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து, 2023 மார்ச் 28 - 30 ஆம் திகதி வரை, அனைத்து கட்டளை அமைப்புகளிலும் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் நட்பு கிரிக்கெட் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன.

வருடாந்த நிகழ்வுகளின் மேலும் ஒரு பிரிவாக, ஹம்பாந்தோட்டை சிறிபோபுரவில் உள்ள கஞ்சதேவ சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் விசேட தேவையுடைய 17 சிறார்களுக்கு சுவையான மதிய உணவுடன் வழங்கப்பட்டது.

தலைமையகத்தின் நுழைவாயிலில் வைத்து படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமானது.

இதன் போது புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி நிலையம் வளாகத்தில் மரம் நடுதல் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதற்கு முன்னதாக படைத் தளபதி படையினர்களிடம் உரையாற்றியதுடன் அனைவருடனும் மதிய உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.

ஆண்டு விழாவின் இறுதி நிகழ்வாக, 8 ஏப்ரல் 2023, 12 வது காலாட் படைபிரிவு தலைமையக மைதானத்தில் மாலை ஒரு இசை நிகழ்வும் இடம் பெற்றது.

மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இசை மாலையை ஆரம்பித்து வைத்தார்.