Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2023 20:48:06 Hours

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு கள விஜயம்

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் நவம்பர் 18 அன்று தம்புள்ளை, கிரலகொல்லவில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு கள விஜயத்தை மேற்கொண்டார்.

முகாம் வளாகத்திற்கு வருகை தந்த படைப்பிரிவின் தளபதியை 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி படையலகின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார்.

அடுத்து, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து முகாம் வளாகத்தை நெருக்கமாகப் பார்வையிட்டதுடன், அவர் படையினருக்கு உரையாற்றினார்.

படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துகொண்ட அவர் புறப்படுவதற்கு முன், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக் குறிப்பை பதிவிட்டார்.

முகாம் விஜயத்தின் பின்னர், படைப்பிரிவின் தளபதி மற்றும் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியுடன் இணைந்து போவதென்ன மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.