Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 19:41:27 Hours

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஒக்டோபர் 4-5 திகதிகளில் லக்ஷபான 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரின் நலன் தொடர்பான விடயத்தை தெரிந்துகொள்ளும் நிமித்தம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இதன் போது 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, சமீபத்தில் நியமிக்கப்பட்ட 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியை அன்புடன் வரவேற்று, அவர் படையினருக்கு உரையாற்றுவதற்கு முன், படையலகுகளின் பங்கு மற்றும் பணிகள் குறித்து அவருக்கு விளக்கினார்.

மேலும், முகாம் வளாகம் மற்றும் இராணுவ வீரர்கள் தங்கும் வசதிகளை ஆய்வு செய்தார். விஜயத்தின் போது லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்திற்கும் விஜயம் செய்தார். பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.