Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2023 07:20:49 Hours

11 வது காலாட் படைபிரிவு படையினரால் ஏழைகளுக்கு கண்டியில் 4 புதிய வீடுகள் நிர்மாணிப்பு

மனிதாபிமான கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 11 வது காலாட் படைபிரிவின் 10 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) சிங்க படையணி படையினர் கண்டி அருப்பொல பிரதேசத்தில் நான்கு குடும்பங்களுக்கு நான்கு புதிய வீடுகளை நிர்மாணித்து ஒக்டோபர் 17 ஆம் திகதி பயனாளிகளுக்கு வழங்கினர்.

அஸ்கிரிய பீடத்தின் அதி வண. வரகாகொட தம்மாசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதன மகாநாயக்க தேரர், அந்த 4 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இராணுவத்தினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைக் கோரி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை தொடர்பு கொண்டதுடன் மூலப்பொருட் செலவினை தாம் முன்வந்து வழங்கினார்.

11 வது காலாட் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் சேவைப் படையணி படையினர் 10 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொ) சிங்க படையணி படையினர் இணைந்து அருப்பொல பிரதேசத்தில் நான்கு தனித்தனி இடங்களில் நான்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டனர்.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 111 வது பிரிகேட் தளபதி மற்றும் அவர்களுக்குரிய கட்டளை அதிகாரிகள் சில வாரங்களுக்குள் 10 கஜபா படையணி மற்றும் 2 (தொ) இலங்கை சிங்க படையினரின் ஆதரவுடன் முழு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்தனர்.

அஸ்கிரிய பீடத்தின் அதி வண. ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனா மகாநாயக்க தேரர், 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க, 111 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டப்ளியு எம் எஸ் என் எரகொட ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இவ் விழாக்களில் கலந்து கொண்டனர்.