Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2023 06:21:03 Hours

10 வது (தொ) கெமுனு ஹேவா படையினரால் முன்னாள் எல்ரீரீஈ போராளிக்கு படுக்கையறை மற்றும் சமையலறை நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேடின் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால், முன்னாள் எல்ரீரீஈ போராளி ஒருவருக்கு தங்களுடைய சொந்த நிதியில் அவரின் இருப்பிடத்தில் தேவையான படுக்கையறை மற்றும் சமையலறை என்பன நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.

2009 ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பாதுகாப்பு படையினருக்கு எதிரான எல்ரீரீஈயினர் நடத்திய போரின் போது தனது ஒரு காலை இழந்த அடம்பன் நெடுங்கண்டலில் உள்ள முன்னாள் எல்ரீரீஈ போராளியான திரு.சின்னப்பு ஜேசுநாதன் அவர்கள் உறங்குவதற்கும் சமையல் செய்வதற்கும் வசதியில்லாத வீட்டில் வாழ்ந்து கொண்டுருந்த நிலைமையை கருத்திற் கொண்டு 10 (தொ) கெமுனு ஹேவா படையினர் இப்பணியை முன்னெடுத்தனர்.

அதற்கமைய, 10 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் தானாக முன்வந்து மூலப்பொருட்களை கொள்வனவு செய்து, முன்னாள் புலிப் போராளியின் வேண்டு கோளுக்கு இணங்க அவரது வீட்டில் படுக்கையறை மற்றும் சமையலறையை நிர்மாணித்தனர். புதன்கிழமை (5), 541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூடபிள்யூஎஸ் கமகே, சிவில் விவகார அதிகாரி மற்றும் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியுடன் இணைந்து உலர் உணவுப் பொதிகளுடன் உத்தியோகபூர்வமாக நிர்மாணிப்பை வழங்கினர்.

இந்த நிகழ்வில் நிர்மாணப்பணிகளுக்கு பங்களித்த பல பிரதிநிதிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி இந்த திட்டத்திற்கு தனது வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.