Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2024 13:22:08 Hours

10 வது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இராணுவ சிங்க படையணியினால் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு

தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன், விசுவமடு, பாலிநகர் மகா வித்தியாலயம் மற்றும் கனகராயன்குளம் பாடசாலையில் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இலங்கை இராணுவ சிங்க படையணியினால் 2024 ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சிகள் 561 வது காலாட் பிரிகேட் பிரிவின் தளபதி கேணல் எம்ஜிஏ மலந்தெனிய ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டன.

தேசிய அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரச் சபையின் பயிற்றுவிப்பாளர் திருமதி. ஏ.விமலா அவர்களால் பாதகமான விளைவுகள், ஆபத்தான போதைப்பொருள் வகைகள், பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருளுக்கு பங்களிக்கும் காரணிகள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது.

10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இலங்கை இராணுவ சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 950 மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந் நிகழ்வில் பங்குற்றினர்.