Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 22:00:39 Hours

1 வது இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் சன்னிதி

பனாகொடயில் அமைந்துள்ள 1 வது இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகம் வியாழக்கிழமை (13) தனது புதிய விகாரை மண்டபத்தை வழிபாடுகளுக்காக வளாகத்தில் சமய நிகழ்வின் போது திறந்து வைத்ததுடன் இதில் தகுதியான மாணவர் குழுவிற்கு கல்வி நோக்கங்களுக்காக புலமைப்பரிசில்களும் நன்னகொடையாக வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் புதிய விகாரையில் புத்தர் சிலையை வைப்பதற்காக நன்கொடை வழங்குவதில் முக்கியப் பங்காற்றியதுடன் இது இராணுவப் வளாகத்தில் 1 வது இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான ஆன்மீக மேம்பாட்டு தளமாகும்.

பல பௌத்த பிக்குகள் இந்த நிகழ்விற்கு ஆசீர்வாதங்களையும் மத சடங்குகளையும் செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சேர்ந்து, 'செத்பிரித்' பிராயணங்களுக்கு மத்தியில் சிலையைத் திறந்து வைத்து பக்தியின் அடையாளமாக காணிக்கைகளை செலுத்தினார்.

அன்றைய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்ப கொஸ்கமவில் உள்ள மனகட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த பத்தொன்பது மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், இராணுவ பொறியியல் சேவை படையணி நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மனகட கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபர் மற்றும் ஆசியர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.