Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2023 20:59:39 Hours

‘தீகவாப்பிய’ புனித தாதுக்கள் இராணுவ தலைமையகத்தில் வழிபாட்டிற்கு

கிழக்கில் முழுமையாக புனரமைக்கப்பட்ட 'தீகவாப்பியவில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள புனித தாதுக்கள் மற்றும் கலசம் (சூடாமாணிக்யா) போன்றவை எடுத்துச் செல்லும் ஊர்வலம் இன்று (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தை வந்தடைந்தது.

இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கிய ஏராளமான பக்தர்கள், பிரதான கட்டிடத்தில் வைக்கப்பட்ட புனித தாதுக்கள் மற்றும் கலசம் (சூடாமாணிக்யா) என்பவற்றிக்கு வணக்கம் செலுத்தினர். அதன் பின்னர், களுத்துறை மாவட்டத்தில் உள்ள சமய ஸ்தலங்களுக்கு ஊர்வலம் பயணத்தை ஆரம்பித்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பீல் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி வரலாற்று சிறப்புமிக்க 'தீகவாப்பிய' தூபியின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணியை 2020 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டார். இன்றுவரை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.