Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2023 21:00:13 Hours

‘சூப்பர் நைட்ஸ் இன்டர்நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப் 2023’ல் இராணுவ செஸ் வீரர்கள் பிரகாசிப்பு

இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வீரர்கள் கலந்து கொண்ட ஐந்து நாட்கள் கொண்ட ‘சுப்பர் நைட்ஸ் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் 2023’க்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 5 மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படை வீரர்கள் சாம்பியனாகவும், இலங்கை இராணுவ அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை விமானப்படையும் தேசிய சேமிப்பு வங்கியும் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டன.

இலங்கை கவச வாகன படையணியைச் சேர்ந்த மேஜர் ஏஏபிடிபீ அபேவர்தன ஈஎல்ஓ தரப்படுத்தல் பிரிவில் 1600 - 1800 சாம்பியனாகத் தெரிவானார், இலங்கை இராணுவ மருத்துவ படையணியைச் சேர்ந்த கோப்ரல் டிஎன்எஸ் சில்வா ஈஎல்ஓ தரப்படுத்தல் பிரிவில் 1000 – 1200 இல் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.