Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2023 15:41:39 Hours

‘கோவில்’ புனரமைப்புத் திட்டத்தைப் பாராட்டிய கிராம மக்களும் குருக்களும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு படையினர் காத்த பிள்ளையார் கோவிலை புனரமைப்பதற்கு தமது தொழில்நுட்ப மற்றும் மனிதவள உதவிகளை வழங்கினர்.

பக்தர்களின் சமயத் தேவைகளுக்காக இராணுவத்தினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டி பிரதம குருக்களும் கிராம மக்களும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) புனரமைக்கப்பட்ட 'காத்த பிள்ளையார்' கோவிலில் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ , 682 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் தளபதி ​கேணல் டபிள்யூ டபிள்யூ கே ரோஹன் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி கேணல் ஜே.எம்.டபிள்யூ.கே. ஜயலத், மற்றும் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.ஆர். ரணவீர ஆகியோரை அழைத்து சிறப்பு ஆசீர்வாதத்தை வழங்கினர்.

புதுப்பிக்கப்பட்ட கோவிலின் திறப்பு விழா மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த 'பூஜை'யில் சுமார் 100 பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, புணரமைப்பை மேற்கொண்ட 682 வது காலாட் பிரிகேட்டின் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டிகளை வழங்கி நிகழ்விற்கு ஆதரவு வழங்கினர்.