Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2023 22:20:44 Hours

‘ஆர்யா அறக்கட்டளையினால் முல்லைத்தீவு வீரச் செயல்களின் நினைவுகள் புதுப்பிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் உறுப்பினர்கள் 'ஆர்ய அறக்கட்டளை' அமைப்பாளர்களுடன் இணைந்து அதன் வழக்கமான 'உதாராய் ஒப ரணவிரு கிரியன்விதய' (நீங்கள் ஒரு துணிச்சலான போர்வீரன்) நிகழ்ச்சியை சனிக்கிழமை (28 ஒக்டோபர்) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகவளாகத்தில் 800 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் முன்னெடுத்தனர்.

மத அனுசரிப்புகள், தேசிய கீதம் பாடல் மற்றும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி ஆகியவை அன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு களம் அமைத்தன.

மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ (ஓய்வு), ‘ஆர்யா அறக்கட்டளையின்’ தலைவர் திரு சரித்கிரியெல்ல, சிரேஷ்ட வழக்கறிஞர் சஞ்சய ரன்துங்க, சிரேஷ்ட சகோதரியும் சமூக சேவகியுமான எம்.எஸ்.புஷ்பா ரம்யானி டி சொய்சா, சிரேஷ்ட நடிகர் பந்து சமரசிங்க, சிரேஷ்ட பாடகர் இந்திரஜித் தொலமுல்ல, சிரேஷ்ட நடிகர் சேனக விஜேசிங்க, சிரேஷ்ட பாடகர் அதிகாரிவானையற்ற அதிகாரி I சம்பத் சூலரத்ன (ஓய்வு), ஆகியோர் முல்லைத்தீவு போர்முனைகளின் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து சுருக்கமான உரைகளை நிகழ்த்தியதன் மூலம் நினைவேந்தலில் பங்கேற்றனர்.

பின்னர், இரண்டாவது அமர்வில் நிகழ்ச்சி மற்றும் அதன் நடத்தை பற்றி பேச பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் 'ஆர்யா அறக்கட்டளையின்' தலைவர் திரு சரித் கிரியெல்ல மற்றும் அமைப்பாளர்களின் முயற்சிகளைப் பாராட்டிய குழுவினருக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தெலகே யுஎஸ்பீ பீஎஸ்சி, 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யுஎஸ்பீ என்டிசி, முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.