Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2023 20:36:50 Hours

விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு

விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் 2023 ஜூலை 10 திகதி விஜயபாகு காலாட் படையணி போர் வீரர் நினைவு தூபியில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த 131 அதிகாரிகள் மற்றும் 2864 சிப்பாய்களின் அழியாத நினைவுகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.தேசிய கீதம் , இராணுவ கீதம் மற்றும் படையணி கீதம் பாடல், மத அனுஷ்டானங்கள் தொடர்ந்து அந் நாளின் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் விஜயபாகு காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியூ டப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, விஜயபாகு காலாட் படையணி பேரவை உறுப்பினர்கள், சிரஷே்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடன் இராணுவ சிப்பாய்களும் நினைவிடத்தினை சூழ இறந்த அனைத்து போர் வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் விஜயபாகு காலாட் படையணி பேரவை உறுப்பினரும் நிகழ்வின் தலைவருமான பிரிகேடியர் பீ.ஏ.டி.டீ.யு பெரேரா அவர்கள் வரவேற்பு உரையை ஆற்றினார். ‘ரண பெர’ எனும் மேளம் வாசித்ததனை தொடர்ந்து துணிச்சல் மற்றும் வீரம்மிகு நினைவுகளுக்கு மத்தியில் அனைவரது கண்களும் நினைவுதூபியை நோக்கி சென்றதுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு விஜயபாகு காலாட் படையணி படைத் தளபதி அவர்கள் அனைத்து படையினர், மறைந்த விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களின் அன்பான உறவினர்களுக்கு ஆற்றிய உரையில் மறைந்த விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களை மறக்க முடியாது என்பதால் எந்த நேரத்திலும் எந்த உதவிக்கும் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தை அணுகுமாறு அந்த குடும்ப உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

அந்தி சாயும் போது, இராணுவ மரபுகளுக்கு இணங்க லாஸ்ட் போஸ்ட் மற்றும் ரீவில்லி ஒலித்ததுடன் மறைந்த விஜயபாகு காலாட் படையணி போர்வீரர்களின் அன்பான அனைவரையும் மெழுகுவர்த்திகளை ஏற்றி பத்தி குச்சிகளை ஏந்திய படி விழா நிறைவுக்கு வந்தது. அந்த உறவினர்களில் பலர் நினைவு தூபியின் அடிவாரத்தில் மண்டியிட்டு கண்ணீர் வடிப்பதற்கு முன்பு மலர்க்கொத்துகளை ஏந்தியபடி காணப்பட்டனர்.

படைத்தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் அந்த குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்ளை பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கி, அவர்களின் இதயங்களையும் மனதையும் ஆறுதல்படுத்தினர். வருகை தந்த பிரதம அதிதியை விஜயபாகு பாலாட் படையணி தலைமையக நிலைய தளபதி பிரிகேடியர் எம்ஏடிஜேடி குணதிலக ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் நுழைவாயிலில் வரவேற்றார்.

விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உயிரிழந்த விஜயபாகு காலாட் படையணி போர் வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.