Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2023 20:20:57 Hours

விஜயபாகு காலாட் படையணியின் 33 வது ஆண்டு நிறைவு

விஜயபாகு காலாட் படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை 2023 மார்ச் 22 அன்று போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் படையணியின் படைத்தளபதி, படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் வண்ணமயமான விழாவுடன் கொண்டாடியது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக விஜயபாகு காலாட்படை படையணி படைத்தளபதியும் இலங்கை இராணுவ பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் முதலாம் படை தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் கலந்து கொண்டார். படையணி தலைமையகத்திற்கு வருகைதந்த அவரை அன்புடன் வரவேற்றதுடன், விஜயபாகு காலாட்படை படையணி நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த விஜயபாகு போர்வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன்னர் இராணுவ முறைமைகளுக்கு அமைய பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அணிவகுப்பு மைதானத்தில் படையணி வர்ணங்கள் உட்பட, சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இந்த குறிப்பிடத்தக்க நாளைக் குறிக்கும் வகையில், மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டதுடன், படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படங்களையும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து படைத்தளபதி அனைத்து படையினருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் உரையாற்றியதுடன் படையணியின் முன்னாள் படைத்தளபதிகள், முன்னாள் படையினர்களின் அர்ப்பணிப்பு சேவைக்காக தலைமையகத்தின் தற்போதைய தரத்திற்கு கொண்டு வந்ததற்காக சிறப்பு மரியாதை செலுத்தினார். அன்றைய நினைவு விழா 'தி சல்யூட்' பல்லூடக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் நிறைவடைந்தது.

33 வது படையணி தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத மரபுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, புனித தளதா மளிகைக்கு ‘கிலன்பச’ வழங்கப்பட்டது. 2023 மார்ச் 23 அன்று, புனித தளதா மளிகை விகாரைக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆன்மிக வழிபாட்டின் போது வீரமரணம் அடைந்த விஜயபாகு படைவீரர்கள் நினைவுகூரப்பட்டதுடன் அவர்களின் சிறப்புகளும் நினைவுகூரப்பட்டன. படையணியின் உறுப்பினர்களுக்கு மேலும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் அந்த மதப் பிரிவுகளின் போது அவர்களின் எதிர்கால முயற்சிகளில் வெற்றிக்கு ஆசி வழங்கப்பட்டது.