Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2023 22:10:30 Hours

விஜயபாகு கலாட் படையணியின் வெசாக் பண்டிகை

விஜயபாகு கலாட் படையணியின் படைத் தளபதியும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விஜயபாகு காலாட்படை படையணியின் படையினரால் மே 5 முதல் 7 ம் திகதி வரை போயகனே விஜயபாகு கலாட் படையணியின் தலைமையகத்தில் வண்ணமயமான வெசாக் பண்டிகையை நடத்தினர்.

இதன் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக விஜயபாகு கலாட் படையணியின் படைத் தளபதியும் விஜயபாகு கலாட் படையணியின் சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி குமுது மானகே ஆவர்களும் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றிய பின்னர் மின்வெசாக் கூடுகளை இயக்கி வைத்தனர்.

விஜயபாகு கலாட் படையணியின் வண்ணமயமான வெசாக் கூடுகள், பக்தி கீதம் மற்றும் அப்பகுதி பார்வையாளர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிகாரிகளின் துணைவியார் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.