Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th June 2023 22:41:33 Hours

வன்னி படையினரால் வறிய குடும்பமொன்றிக்கு மேலும் ஒரு வீடு

ஆஸ்திரியாவை வதிவிடமாக கொண்ட நன்கொடையளர்களின் உதவியுடன் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அனுசரணையில் வன்னி பாதுகாப்பு படையினரின் சிவில் இராணுவ ஒத்துழைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக கெக்கிராவ, சூரியகம, மஹாஎலகமுவ பிரதேசத்தில் உள்ள ஏழை குடும்பத்திற்கு புதிய வீட்டை படையினர் நிர்மாணி நிர்மாணிக்கின்றனர்.

1, 5 மற்றும் 9 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான திரு.ஆர்.எம்.ஜீவந்த பிரசாத் ரத்நாயக்கவுக்கான புதிய வீட்டிற்கான அடிக்கல் வியாழன் (ஜூன் 22) அன்று படையினரால் மேற்கொள்ளப்பட்ட தரை தயாரிப்புகளின் பின்னர் நாட்டப்பட்டது. அக்குடும்பத்தின் பொருளாதார நிலை கருத்தில்கொண்டு இவ் உதவி வழங்கப்படுகிறது.

வன்னிப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டு 212 வது காலாட் பிரிகேட் தளபதியினால் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த நன்கொடையாளர்களான திருமதி கிருதா பீரிஸ் மற்றும் நிஹால் ஹரிஷ்சந்திர ஆகியோர் இராணுவத்திற்கு அளித்த நிதியுதவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

7 வது (தொ) இலங்கை கவச படையணி படையினர் இந்த திட்டத்தை சில வாரங்களுக்குள் முடிக்க தங்கள் மனிதவள உதவி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகின்றனர்.

212 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்.எம்.சி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களினால் அதிகாரிகள், சிப்பாய் மற்றும் பயனாளிகளின் முன்னிலையில் வீடு நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.