Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2023 00:37:21 Hours

வன்னி படையினரால் பொதுமக்களுக்கு மேலும் 1000 தென்னம் பிள்ளை

21 வது காலாட் படைப்பிரிவின் 213 வது காலாட் பிரிகேட் படையினரால் வட பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தென்னைச் செய்கை திட்டத்தின் ஒரு பகுதியாக (நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 4) வவுனியா பிரதேசத்தில் இரண்டு நாட்களில் மேலும் 1000 தென்னை பிள்ளைகள் வழங்கப்பட்டன. தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட வடக்கு இரண்டாம் தெங்கு முக்கோண வலயத்தறுகாக வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் தீவிர பங்களிப்புடன் விரிவான திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, அவர்களின் அறிவுறுத்தலின் படி தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியுடன் படையினரால் வீட்டு வாசலுக்குச் சென்று தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தினை 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணி படையினர் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து தென்னம் பிள்ளைகளை வழங்கினர்.