Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2023 17:45:32 Hours

வன்னி தளபதி 56 வது காலாட் படைப்பிரிவிற்கு விஜயம்

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுபீஏடிடப்ளியு நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்கள் வவுனியா, கொகெலியாவில் அமைந்துள்ள 56 வது காலாட்படை பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள பிரிகேட் மற்றும் படையலகளுக்கு புதன்கிழமை (ஓகஸ்ட் 09) தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜீ அவர்களினால் தளபதி பாதுகாவலர் அறிக் கையிடலை தொடர்ந்து வரவேற்கப்பட்டார். தொடர்ந்து படையினருக்கு உரையாற்றியிதுடன் படைப்பிரிவின் வகிப்பங்கு பணிகளை குறித்து அறிந்துகொள்வதற்கு முன்னர் தளபதி படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

பின்னர், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது படையினருடன் உரையாடியதுடன் அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் கருத்துக்களை பதிவிட்டார்.