Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 21:51:10 Hours

வன்னியில் மேலும் ஒரு படையலகு பாடநெறி நிறைவு

வன்னி பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பம்பைமடுவில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் நடாத்தப்பட்ட மேலதிக படையலகு பாடநெறி - எண்: 05, செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நிறைவு பெற்றது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21, 54, 56, 62, மற்றும் 65 வது காலாட் படைப்பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 10 படைக் குழுக்களிலிருந்து 9 அதிகாரிகள் மற்றும் 248 சிப்பாய்கள் இந்த பாடநெறியில் கலந்துகொண்டனர்.

பாடநெறியின் பாடத்திட்டமானது, ஜிபிஎஸ் கையாளுதல், ஆயுத போர் யுக்திகள், விஷேட பிரமுகர் பாதுகாப்பு, துப்பாக்கி சுடும் தொகுப்பு (நேரடி துப்பாக்கிச் சூடு மூலம் ஆயுதங்களைக் கையாளுதல்), தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நடவடிக்கைகளுக்கான ஈடுபாடு விதிகள், சிறப்பு செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் உள்ளக பாதுகாப்பு கடமைகள் பற்றிய விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகளை கொண்டிருந்தது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஜெனரல் எஸ்பீஜி கமகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, 56 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர். சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது, கீழ்வருவோர் சிறப்பு கிண்ணங்களை பெற்றனர்.

சிறந்த படைக்குழு – 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி (54 வது காலாட் படைப்பிரிவு)

சிறந்த படைக்குழு கட்டளையாளர் - கெப்டன் எஸ்யு முனசிங்க இதேபாப

சிறந்த வரிசை கட்டளையாளர் - கோப்ரல் எஸ்ஆர்ஆர்எஸ்பீ தர்மசேன – 20 வது கப

சகல துறையிலும் சிறந்தவர் - கோப்ரல் டபிள்யூஏகே விஜேரத்ன – 10 வது (தொ) கொஹேப.

சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் - சி/10F02136 கோப்ரல் டபிள்யுஏகே விஜேரத்ன – 10 வது (தொ) கொஹேப

சிறந்த உடற்தகுதி வீரர் - சி/F100804 லான்ஸ் கோப்ரல் கேஎம்பீ மதுஷங்க - 10 வது (தொ) கொஹேப