Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2023 00:26:36 Hours

வன்னிப் படையினர் வெள்ள நிவாரண பணியில்

தொடர்மழை மற்றும் பலத்த காற்று தொடர்வதால் அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் படையினர் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (18) பிற்பகல் தொடக்கம் 48 மணி நேரத்தில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பெரியபாண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், பெரியபாண்டிவிரிச்சான் குளத்தின் மதகுகள் திறக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மடு பிரதேச செயலகப் பகுதிகளில் சிக்கியிருந்த 73க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை (டிசம்பர் 16) 542 வது காலாட் பிரிகேட் மற்றும் 4 வது கஜபா படையணியின் படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 7 வது இலங்கை கவச வாகனப் படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) திரப்பனை, மணம்பெரியவ குளக்கரையில் நீர் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். படையினர் சிவில் தன்னார்வலர்களின் ஆதரவுடன் மணல் மூட்டைகளை வைத்து அரிப்பைத் தடுத்தனர்.

இதனைத் தடுக்காவிட்டால், பஹல அம்பத்தளை பிரதேசத்தில் வாழும் கிராம மக்களுக்கு அழிவை ஏற்படுத்தியிருக்கும் என விவசாய அதிகாரிகள் கருதுகின்றனர். பல மணி நேரமாக் மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் 7 வது இலங்கை கவச வாகனப் படையணியின் கட்டளை அதிகாரியும் பங்கேற்றார்.

இதற்கிடையில், சனிக்கிழமை (டிசம்பர் 16) மாலை பெரியபாண்டிவிரிச்சான் கிழக்கு பகுதிக்கு விரைந்த 4 வது கஜபா படையணியின் படையினர் பெரியபாண்டிவிரிச்சான் குளத்தில் ஏற்பட்ட பிளவை விரைவாக சரிசெய்தனர். இரண்டு அதிகாரிகள் உட்பட 17 இராணுவ சிப்பாய்களைக் கொண்ட குழு குறுகிய காலத்திற்குள் பெரும் அனர்த்தத்தைத் தடுப்பதற்கான பணியை செய்து முடித்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, .54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கே எம் பீ எஸ் பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎல்எம் சந்திரசேகர ஆர்டப்ளியூபீ பீஎஸ்சி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை கவச வாகனப் படையணி மற்றும் 4 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகளினால் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.