Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2023 20:17:56 Hours

வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் புதிய தளபதி கடமையேற்பு

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பிரிகேடியர் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் 29 வது தளபதியாக ஜூன் 2023 அனுராதபுரத்தில் பதவியேற்றார்.

இராணுவ சம்பிரதாய முறைகளுக்கிணங்க வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் படையினரால் அவருக்கு முகாம் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்கு உரையாற்றுவதற்கு முன்பு வளாகத்தில் ஒரு மரக்கன்று நட்டுவைத்தார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.