Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2023 18:00:43 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தினால் கணனி பாடநெறி ஆரம்பிப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் குடாநாட்டில் சேவையாற்றும் படையினரின் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'கணினி திறன் உரிமப் பாடநெறி' செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 04) யாழ்ப்பாணத்தில் உள்ள 7 வது ரணவிரு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் நிறைவு பெற்றது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இப் பாடநெறி 17 சிப்பாய்களின் பங்கேற்புடன் ஒரு மாதம் நடத்தப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால அவர்களின் முன்னிலையில் சான்றிதழ் வழங்கல் இடம்பெற்றது.

10 வது இலங்கை பொறியியல் படையணியின் சிப்பாய் ஜேஎல்எஸ்எஸ் செனவிரத்ன பாடநெறியில் முதலாம் இடத்தையும், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களை முறையே 2 வது இலங்கை இராணுவ புலனாய்வு படையணியினை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஈஎம்எல்பி ஏக்கநாயக்க மற்றும் 11 வது (தொ) சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் ஈஏபிஎஸ் விஜேதுங்க ஆகியோர் பெற்றனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.