Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2023 22:25:00 Hours

யாழ். படையினரால் 19 வயது பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் மற்றும் தலைவருமான, திரு வாமதேவ தியாகேந்திரன் மற்றும் சுள்ளிபுர கோவிலின் உறுப்பினர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் கீழுள்ள 513 வது காலாட் பிரிகேட் படையினரால், அண்மையில் தேசிய மட்டத்தில் சாதனைகளை புரிந்து மகளிர் தேசிய (19 வயதுக்குட்பட்ட) கிரிக்கெட் அணியில் உறுப்பினராகி, யாழ், சூள்ளிபுரத்திலுள்ள விக்டோரியா கல்லூரிக்கு பெறுமையை சேர்த்த செல்வராசா கிரிஸ்டிகாவுக்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவிகள் கையளிக்கும் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு செல்வராசா கிரிஸ்டிகா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் (ஜனவரி 6) வீட்டிற்கான சாவியை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், அனுசரணையாளர்கள், பெறுநரின் உறவினர்கள், 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, 513 காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரிஸ்வி ராசிக், 18 கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இத்திட்டத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் கேடபிள்யூகே ஹேமந்த அவர்கள் செயற்பட்டார்.

தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் மற்றும் தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கியதுடன், சுள்ளிபுரம் கோவிலில் உள்ள உறுப்பினர்கள் வீட்டைக் நிர்மாணிப்பதற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கினார். படையினர்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் அவர்களது மனிதவளம் வழங்கப்பட்டதுடன், எதிர்பார்த்த தினத்தை விட முன்னதாகவே புதிய வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில், பயனாளிகளுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. பதாதை திரைநீக்கம் செய்து, நாடா வெட்டிய பின்னர், புதிய வீட்டின் சாவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.