Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2022 19:30:26 Hours

யாழ்ப்பாண மக்களை ஈர்த்த மென்பந்து கிரிகெட் போட்டி

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் கீழுள்ள 553 வது காலாட் பிரிகேட் படையினருக்கும் சிவில் மக்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் குடாநாட்டில் 8 சிவில் விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றிய மென்பந்து கிரிக்கெட் போட்டி நவம்பர் 15 தொடக்கம் 22 வரை நடைபெற்றது.

இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (27) பாரதி டற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் தாலையடி பொது மைதானத்தில் நடைபெற்றன. ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

கிரிக்கட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இராணுவ இசைக்குழு மற்றும் நடனக் குழுவினர் இசை மற்றும் பொழுதுபோக்கை வழங்கியதுடன், போட்டியின் முடிவில் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் வழங்கினார்.

கடைக்காடு தேவாலயத்தின் அருட்தந்தை அமல் ராஜ், மருதாங்கேணி பிரதேச செயலாளர் திரு.பி.மூர்த்தி, பிரதேசத்தின் கிராமசேவை உத்தியோகத்தர்கள், 552 வது காலாட் பிரிகேட் தளபதி, 55 வது காலாட் படைபிரிவின் பணிநிலை அதிகாரிகள், 10 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 12 வது விஜயபாகு காலாட் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் , அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.

போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் இறுதி வாரத்தில் 15 தொடக்கம் 22 வரையிலான காலப்பகுதியில் நடைபெற்றதுடன் 27 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.