Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2024 16:43:54 Hours

யாழ்.பாதுகாப்பு படையின் புத்தாண்டு கொண்டாட்டம்

2024 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2024 ஏப்ரல் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் பாரம்பரிய புத்தாண்டு விழாவை யாழ். பாதுகாப்புப் படை தலைமையக படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் அழைப்பின் பேரில் சர்வமத குருமார்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம், யாழ்பாணத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் போன்ற பிரமுகர்களும் இவ்விழாவில் பங்குபற்றினர்.

இவ்விழாவின் பாரம்பரிய விளையாட்டுகளான சைக்கிள் பந்தயம், மரதன், அழகுராணி தேர்வு, சறுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், தலையணைச் சண்டை, ரபான் இசைதல், வினோத உடை, கோலம் போடுதல் மற்றும் பல வேடிக்கையான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

புத்தாண்டு விழாவின் இறுதியில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் பல அழைப்பாளர்கள் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அன்று மாலை ஒரு வண்ணமயமான இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நள்ளிரவு வரை தொடர்ந்தது, இது பங்கேற்பாளர்களை ரசிக்க போதுமான வாய்ப்பை வழங்கியது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.