27th January 2023 23:34:00 Hours
இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் மாண்புமிகு போனி ஹார்பாக் அவர்கள் வடக்கிற்கான விஜயத்தின் போது புதன்கிழமை (ஜனவரி 25) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு வருகை தந்த தூதுவரை யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்கள் அன்புடன் வரவேற்றார். இந்தச் சுமூக சந்திப்பின் போது யாழ். தளபதி மற்றும் அதிமேதகு போனி ஹார்பாக் ஆகியோர் சிவில் இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத் திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அதிமேதகு போனி ஹார்பாக் அவர்களின் யாழ். பாதுகாப்பு படை தலைமையக விஜயத்தின் நினைவாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். மேலும் வழக்கமான சம்பிரதாயங்களுக்கு இணங்க நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.