Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2023 22:09:04 Hours

மேலதிக தாக்குதல் படையலகு பாடநெறி - எண் 06 நிறைவு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடநெறி பம்பைமடு படையலகு பயிற்சிப் பாடசாலையில் 20 செப்டம்பர் 2023 அன்று நிறைவடைந்தது.

இப் பாடநெறி 21,54, மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் 05 அதிகாரிகள் மற்றும் 175 சிப்பாய்களைக் கொண்ட 07 குழுக்களைக் கொண்டிருந்தது.

இப் பாடத்திட்டத்தில் உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு, நிராயுதபாணியான போர் , விஷேட பிரமுகர் பாதுகாப்பு, நேரடி துப்பாக்கிச் சூடு மூலம் ஆயுதங்களைக் கையாளுதல், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், ஈடுபாட்டின் விதிகள், சிறப்பான செயல்பாட்டு நடைமுறைகள் பற்றிய விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வுகள் அடங்கும். செயல்பாட்டு நடைமுறைகள், உள்ளக பாதுகாப்பு கடமைகள் மற்றும் அடிப்படை நீச்சல் பயிற்சி என்பவற்றை உள்ளடக்கியிருந்தது.

56வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் பங்குபற்றுதலுடன் மேஜர் ஜெனரல் டபிள்யூபீடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களால் பாடநெறிக்கான நிறைவுரை வழங்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பணி 56 வது காலாட் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, படையலகுகளுக்கு பங்களிப்பு வழங்கிய அந்தந்த படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பம்பேமடு பயிற்சி பாடசாலையின் பிரதான பயிற்றுவிப்பாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

சிறந்த படைப்பிரிவு என்ற பட்டம் 3 வது கவச வாகனப் படையணிக்கு வழங்கப்பட்டதுடன், இது அவர்களின் முன்மாதிரியான குழுப்பணி மற்றும் ஒழுக்கத்திற்கு சான்றாகும். விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் கேபிஈஎச்ஆர் கெப்பெட்டியகொட அவர்கள் சிறப்பான தலைமைத்துவ திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த படைக்குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்பீஎன்ஜே பியரத்ன அவர்கள் சிறந்த வரிசை தலைவராக கௌரவிக்கப்பட்டார், இது அவரது குழுவின் மீதான அவரது விதிவிலக்கான கட்டளையின் பிரதிபலிப்பாகும் 12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ்ஏ ஹேரத் அவர்கள் இராணுவ சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்த சகலதுறை சிப்பாயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் சுபசிங்க அவர்கள் துல்லியமான துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த துப்பாக்கி சுடும் வீரராகப் பாராட்டப்பட்டார், 2 வது இயந்திரவியல் காலாட் படையணியைச் சேர்ந்த பணி நிலை சார்ஜென்ட் ஜிடபிள்யூஎஸ்ஏ பண்டார அவர்கள் சிறந்த பௌதீக வீரருக்கான விருந்தையும் பெற்றுக் கொண்டார்.