Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th February 2018 15:32:08 Hours

முல்லைத் தீவு பிரதேச மக்களிற்கு 400ற்கும் மேற்பட்ட படையினர் இரத்ததானம் வழங்கி வைப்பு

முல்லைத் தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது 64ஆவது மற்றும் 68ஆவது படைப் பிரிவினரால் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத் தீவு போதனா வைத்தியசாலை நோயாளிகளுக்கான இரத்ததான நிகழ்வை மேற்கொண்டனர். இந் நிகழ்வானது முல்லைத் தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.

அந்த வகையில் மற்றுமோர் சமூக சேவைத் திட்டமான 59ஆவது படைத் தலைமையகத்தில் முல்லைத் தீவு போதனா வைத்தியசாலை அதிகாரிகளினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) நோயாளிகளுக்கான இரத்த தானம் படையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டது.

மேலும் இவ் இரத்ததான நிகழ்வுகள் முல்லைத் தீவு வைத்தியசாலையில் இரத்த வங்கிப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க படையினரால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வை 59ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாராச்சியவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது இராணுவ உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் குழுவினர் இணைந்து இரத்த தானத்தை வழங்கியுள்ளனர்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் போன்றோர் முல்லைத் தீவுப் படையினருக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.

Best Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf