Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2023 00:17:38 Hours

முல்லைத்தீவு படையினரால் சிவில் காற்பந்தாட்டக் கழகங்களுக்கு ஊக்குவிப்பு போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு, பாதுகாப்புப் படையினருக்கும் புதுக்குடியிருப்புப் பொது மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘காற்பந்தாட்டப் போட்டி’யை ஏற்பாடு செய்தனர். இறுதிப் போட்டி புனித அந்தோணி மைதானத்தில் சனிக்கிழமை (மே 27) நடைபெற்றது.

இந்நிகழ்வு 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் 681 மற்றும் 682 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் அவர்களின் கீழுள்ள கட்டளை படையலகுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

காற்பந்து போட்டியில் 12 உள்ளூர் விளையாட்டு கழகங்கள் போட்டியிட்டன. ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர், புனித அந்தோனியார் விளையாட்டுக் கழக அணியும், புதுக்குடியிருப்பு கிழக்கு சுப்பர் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியின் போது, புதுக்குடியிருப்பு கிழக்கு சுப்பர் ரேங்க்ஸ் தனது போட்டியாளர்களான புனித அந்தோனி விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 6-4 என்ற கோல் கணக்கில் பெனால்டி கோல்களைப் பெற்று சம்பியன்ஷிப்பை வென்றது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், வெற்றியாளர்களுக்கும் இரண்டாம் இடங்களைப் பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், மதகுருமார்கள், சிவில் அதிகாரிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான உள்ளூர் பார்வையாளர்கள் இறுதி போட்டியை கண்டுகளித்தனர்.