Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2023 20:27:41 Hours

முல்லைத்தீவுப் படையினர் பாதகமான காலநிலை நிலைமைகளுக்கு விரைவு பதிலளிப்பு

வசந்தபுரம், கீரனாமடு, பாண்டரவன்னி, முத்துநாயகபுரம், பேராறு, குழாம்முறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவு பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதால், 641 காலாட் பிரிகேட் படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் தற்காலிக தங்குமிடங்களை ஐந்து அனர்த்த நிவாரண நிலையங்களில் வழங்கினர்.

641 வது காலாட் பிரிகேட் தளபதி தனது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்களிப்புடன் 64 வது படைப்பிரிவுடன் இணைந்து சிவில் அமைப்புக்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததுடன் முதலில் அந்த ஐந்து நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜெயவர்தன யூஎஸ்பீ என்டிசி, முன்னேற்றங்களை மதிப்பிடும் முயற்சியாக, ஒரு கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன், 19 டிசம்பர் 2023 அன்று மண்ணாகண்டல் ஆரம்பக் பாடசாலை மற்றும் பாண்டரவன்னியன் பாடசாலை ஆகியவற்றில் அமைந்துள்ள அந்த அனர்த்த நிவாரண நிலையங்களைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது, இடம்பெயர்ந்த மக்களின் அவசரத் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட தளபதி, அதற்கேற்றவாறு படையினரை அறிவுறுத்தினார்.

592 வது காலாட் பிரிகேடில் சேவையாற்றும் 14 வது (தொ) கெமுனு ஹேவா படையினர் 2023 டிசம்பர் 20 ஆம் திகதி ஒதியமலை கிராம அலுவலர் பிரிவில் பாரிய அனர்த்தத்தை தடுக்கும் வகையில் தண்ணிமுறிப்பு குளத்தை சீர்செய்தனர். கனமழைக்கு பிறகு நீர்மட்டம் உயர்ந்து வருவதை கிராம மக்கள் முன்னறிவிப்பு செய்தனர்.