Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2019 10:56:42 Hours

முல்லைத்தீவில் இராணுவத்தினரது ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட பயிற்சி முகாம் (9) ஆம் திகதி ஒட்டுசுட்டான் மஹா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி முகாமில் ஆண் , பெண் கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 310 பேர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த பயிற்சி முகாம்கள் இந்த பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகள் இலங்கை இராணுவத்திலுள்ள பிரசித்தி பெற்ற கரப்பந்தாட்ட விஷேட பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆலோசகர்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சி முகாமினை பார்வையிடுவதற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் மற்றும் 642 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் வருகை தந்தனர். Running sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival