Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 00:22:31 Hours

முன்னாள் கஜபா படை வீரர் இராணுவ தளபதியை சந்திப்பு

கஜபா படையணியின் சிரேஸ்ட வீரர்களின் ஒருவரும் முன்னாள் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் டயஸ் (ஓய்வு) டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களை இன்று காலை (ஜூலை 13) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

கஜபா படையணியின் பெருமைமிக்க தயாரிப்புகளில் ஒர்வரான லெப்டினன்ட் ஜெனரல் என்ஏஜேசி டயஸ் (ஓய்வு) அவர்கள் 2015 டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார். அவரது அர்ப்பணிப்புத் தியாகங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சேவையின் காரணமாக இராணுவத்தில் செயல்பாட்டு, நிர்வாக மற்றும் கல்வி நிலைகளில் புகழ்பெற்ற போர்வீரராக திகழ்ந்தார்.

இந்தச் சுருக்கமான சந்திப்பின் போது இராணுவத் தளபதி தனது 35 வருடங்களுக்கும் மேலான பணிக்காலத்தின் போது மாறுபட்ட மற்றும் பொறுப்பான நியமனங்களை இராணுவத்திற்கு வழங்கிய ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரியின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்தார். வருகை தந்த சிரேஸ்ட கஜபா படையணி வீரருக்கு தளபதி நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.