Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2023 22:12:00 Hours

முதலாம் படை தலைமையகம் அதன் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியது

முதலாவது படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் 17 ஒக்டோபர் 2023 அன்று முதலாம் படை தலைமையகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் தொடர் நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

ஆண்டு நிறைவுக்கான தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் 04 அக்டோபர் 2023 முதல் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டு நிறைவு விழாவின் முதற்கட்டமாக முதலாம் படையினர் ஜெய ஸ்ரீ மஹா போதிய மற்றும் ருவன்வெலி சேய ஆகியவற்றில் 'கிரி அஹரா' பூஜைகள் முதலாம் படை தளபதி மற்றும் படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி திருமுருகன்கண்டி பிள்ளையார் ஆலயம், ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கிளிநொச்சி புனித தெரேசா தேவாலயம் ஆகியவற்றில் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் முதலாம் படை விகாரை வளாகத்தில் போதி பூஜையும் நடைபெற்றது. மேலும், மலையாளக்குளத்தில் உள்ள முதியோர் இல்ல முதியோருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், ஆண்டு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரிவுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

முதலாம் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களுக்கு ஆண்டு நிறைவு நாளில் (ஒக்டோபர் 17) முதலாம் படை படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

வழமையான அம்சமாக, முதலாம் படை தலைமையக தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், "படை வீரர்களின் சிறந்த நலன்புரி பயிற்சி" என்று வலியுறுத்தினார். மேலும், முதலாம் படையின் கீழ் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் முதலாவது படை அனைத்து நிலையினரும் நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டினார். இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலைமையக வளாகத்தில் சந்தன மரக்கன்றும் நடப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து குழு படமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. நெலும்பியச பல்நோக்கு மண்டபத்தில் அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் இரண்டாம் ஆண்டு விழா நிறைவுற்றது.

58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடப்ளியுகேஎன் எரியகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, முதலாம் படை சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு விழா அம்சங்களில் பங்கேற்றனர்.