Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st July 2023 19:54:31 Hours

முதலாம் படைத் தளபதி கொமாண்டோ படையணிக்கு விஜயம்

நான்காவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சமீபத்தில், வெள்ளிக்கிழமை (28 ஜூலை 2023) கொமாண்டோ படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அவரை பிரிகேடியர் வீஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அவர் கொமாண்டோ படையணியின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார். 4 வது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரியும் படையணியின் பணிகள் குறித்து விளக்கினார். அதன் பின்னர், முதலாம் படைத் தளபதி படையணி தலைமையகத்திற்குள் கள விஜயம் மேற்கொண்டார்.

மேலும், "பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு" பாடநெறி எண்-31 மற்றும் அதி விசேட பிரமுகர் பாதுகாப்பு பாடநெறி பாதுகாப்பு எண்-06 ஆகியவற்றில் கலந்தி கொணடவர்களுக்கு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் முதலாம் படைத் தளபதி பிரதம அதிதியாக பங்கேற்றார்.

பிரதம அதிதி நிகழ்வில் உரையாற்றியதுடன் குழு படமும் டெுத்துக் கொண்டார்.